'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார். நாளை (அக்.2) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்திடம் 'ஜெயிலர்-2' குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அதற்கு பதிலளித்த அவர், " "தியேட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் வரும்போது 'தலைவா' என்று கத்துவதுதான் சந்தோஷமே. 'ஜெயிலர்' படத்தில் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் அப்பா நடித்தது ஜகானிக். அந்தப் படத்தில் அப்பா வரும்போது தியேட்டரில் அப்படி கத்தினேன். 'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன் ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும் தான். அதை நான் பெருமையாகச் சொல்வேன். 'ஜெயிலர் 2' படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு `தலைவா' என கத்த ஆர்வமாக இருக்கிறேன். 'ஜெயிலர்-1' படத்தில் கதை, காதாபாத்திரம், என் தம்பி அனிருத் இசை எல்லாமே சிறப்பாக இருந்தது. ஜெயிலர் 2 இப்படத்தைப் பார்த்தபோது ஒரு செலபிரேஷன் மாதிரி இருந்தது. அந்த செலபிரேஷனை என் அப்பாவால் கொடுக்க முடியும். 'ஜெயிலர்-1' படத்தை விட 'ஜெயிலர்-2' படத்தில் என் அப்பா கடினமாக உழைத்திருக்கிறார். மக்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதையும் புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நானும் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/soundarya-rajinikanth-about-jailer-2




