டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் - 5 பேர் காயம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் அதிகாலை வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இபாரகி, ஷிபா, சைடமா ஆகிய நகரங்களில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/earthquake-in-japan-5-injured




