தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமானக் கோரிக்கைகளை வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் ஆனால் இன்று முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதை நான் அவையில் சுட்டிக்காட்டினேன். இன்று மாலை சட்டசபை முடிவதற்குள் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாக வேண்டும். அதாவது பதவி உயர்வு, சம்பள உயர்வு, காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு நிரந்தர பதவி உயர்வு வழங்க வேண்டும். சைபர் க்ரைம் மிக மோசமாக நடந்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time." - உதயநிதி விமர்சனம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பல்வேறு பதிவுகள் ஊடுருவி வருகின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு சைபர் க்ரைமை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அதேபோல காவல் மரணத்தில் இறந்த சபரிவர்மன், அருணாசலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதி, வேலைவாய்ப்பை வழங்குவார்கள் என்று பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். அதனை நான் வரவேற்கிறேன். தவெகவினரே பெண்கள் மீது தவறான பதிவுகளைப் பதிவிடுகிறார்கள். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார். தவெக நிர்வாகி கொலை: `ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!' - நயினார் நாகேந்திரன் விமர்சனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/dmdk-premalatha-vijayakanth-about-vijay-speech



