திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியிருக்கும்தானே. இத்தனை ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் ஏன் திமுகவை விட்டு வெளியே வந்தது? திருமாவளவன் - ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை திமுக கையாண்ட விதத்தில்தான் தவறு என எந்த நியாயஸ்தனும் பேசவில்லை. தவெகவை குறைத்து மதிப்பிட்டதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம். கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் மீது ஏன் திமுக அரசு வழக்குப்பதிவு செய்யவில்லை? "அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்.' - திருமா சொல்வதென்ன? விசிக கூடாரம் காலியாகிவிட்டதாகவும் விஜய் பின்னால் சென்றுவிட்டதாகவும் பரப்பினர். உளுந்தூர்பேட்டை கூட்டத்துக்கு வந்திருந்தால் உண்மை என்னவென்று தெரிந்திருக்கும். பதவிக்காக கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை கக்குகின்றனர். பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் போனதுமே நானும் தவெக கூட்டணிக்கு போயிருப்பேன். திருமாவளவன் பதவிக்காக தவெகவுக்கு போய்விட்டதாக பேசும் சிலருக்கு விசிகவின் வரலாறு தெரியாது. திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/vck-thirumavalavan-about-dmk-and-alliance




