சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலின் திரிசூல பத்ரகாளி சிலை, நந்தியின் கருங்கல் சிலை மற்றும் கும்பகோணம் அருகேயுள்ள நாகநாதசுவாமி திருக்கோவிலின் ஆறு முகமுடைய சுப்பிரமணிய சுவாமி சிலைகள் உள்ளிட்ட 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நம் பொக்கிஷங்களை மீண்டும் தமிழகத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ள நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பாரம்பரிய சிலைகள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து காணாமல் போன ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளிட்ட பல பாரம்பரிய சிலைகளையும், கலாசார சின்னங்களையும் மீட்டு, நமது அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் நமது பாரதப் பிரதமர் அவர்களின் தமிழ்ப் பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழை வெறும் அரசியல் மொழியாக மட்டுமே சிலர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ் மொழியையும் அதன் ஆழ்ந்த கலாசாரப் பெருமைகளையும் கொண்டாடுபவர் நமது பிரதமராக வாய்த்தது, நாம் செய்த பெரும் புண்ணியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/recovery-of-missing-traditional-statues-nainar-nagendran-praises-modis-tamil-devotion




