பெங்களூரு, உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மைசூருவில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் தசரா ஊர்வலம் அடுத்த மாதம் 21-ந்தேதி நடக்கிறது. இந்த தசரா ஊர்வலம் மற்றும் அதனை தொடர்ந்து நடக்கும் அலங்கார அணிவகுப்பு வண்டிகளின் ஊர்வலத்தை அரண்மனை முன்பு கண்டு ரசிக்க தங்க அட்டை (கோல்டு கார்டு) வினியோகம் செய்யப்படும். ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தங்க அட்டையை வாங்கினால், அரண்மனை முன்பு அமர்ந்து தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்கலாம் என்று மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தசரா ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்பட தென்மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டியிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கலெக்டர் லட்சுமி காந்த் ரெட்டி, தசரா ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்பட தென்மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பது குறித்து முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முடிவு செய்வார். இதுபற்றி முதல்-மந்திரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தென்மாநில முதல்-மந்திரிகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பார்களா என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/will-chief-minister-vijay-participate-in-the-mysuru-dasara-procession-collector-lakshmikanth-responds




