தமிழக முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் - எம்.பிக்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று பனையூரில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகனுமான சந்தீப் ஆனந்த் இன்று பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள் - எம்.பி.க்கள் இன்று கட்சியில் சேர்ந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/sandeep-son-of-dmk-mp-jagathrakshakan-has-joined-tvk




