புதுடெல்லி, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய மந்திரி ராஜினாமா இந்த நிலையில் தான், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்த நிகழ்விற்கு காக்ரோச் ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். மூன்று கோரிக்கைகள் இதுகுறித்து சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, இந்த நிகழ்வே சான்றாக உள்ளது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். நீங்கள் பயப்படாமல், இந்த அரசுக்கு அடிபணியாமல் இருந்தால், எங்களால் யார் ராஜினாமாவையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த ராஜினாமா சான்று. இளைஞர்கள் பயப்படத் தேவையில்லை. இது ஜனநாயகம், அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் இப்படியே போகமாட்டோம். இந்த நீட் வினாத்தாள் கசிவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அது அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும். கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள் இரண்டாவதாக கடந்த 20ஆம் தேதி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும். இதை நிறைவேற்றுதாக உறுதியளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். நினைவில் கொள்ளுங்கள் கரப்பான் பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்” என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/protest-will-continue-until-demands-are-met-abhijeet-dipke




