சென்னை, சென்னை நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான். ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள் படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம். ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது. இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-today-to-protect-chennais-blessings-anbumani-ramadoss




