பெரும்பாவூர், விவசாயியை காப்பாற்றிவிட்டு உயிர் துறந்த வாலிபரின் உடலை குளிர்சாதன பெட்டி இல்லாமல் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த விவகாரத்தில் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து மந்திரி அதிரடி நடவடிக்கை எடுத்தார். விவசாயியின் உயிரை காப்பாற்றியவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் ராஜேஷ். இவர் சமீபத்தில் கண்ணூர் மாவட்டம் செருப்புழாவில், மீன்துள்ளி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயலில் சிக்கி தவித்த விவசாயியான அப்பகுதியை சேர்ந்த பென்னி (61) என்பவரை மீட்க தனது லைப் ஜாக்கெட்டை கழற்றி கொடுத்து உயிரை காப்பாற்றினார். பின்னர் அவர் அங்குள்ள ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். ஆபத்து நேரத்திலும் தன் உயிரை துச்சமாக மதித்து விவசாயியின் உயிரை காப்பாற்றிய அவரது செயலை சமுக வலைத்தளத்திலும் பலரும் பாராட்டினர். இந்த நிலையில் ஆற்றில் அடித்து செலலப்பட்ட ராஜேஷ் உடல் 4 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. அவரது உடல் பரியாரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாசில்தார் பணியிடை நீக்கம் பின்னர் அவரது உடலை ஆம்புலன்சில் குளிர்சாதனபெட்டி எதுவும் இல்லாமல் இறுதி அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விசாரித்த கேரள வருவாய்த்துறை மந்திரி ஏ.பி.அனில்குமார், சம்பந்தப்பட்ட பையன்னூர் தாசில்தார் கே.பி.போல் என்பவரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/youth-dies-saving-farmer-tahsildar-suspended-for-sending-body-without-refrigerator




