சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் 27.7.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் தற்போது இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட ஒரே ஆர்ப்பாட்டமாக சென்னையில் எனது தலைமையில் 27.7.2026 அன்று காலை 10 மணிக்கு ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெறுகிறது. எனவே, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைப்பதை விடுத்து அனைத்து பொறுப்பாளர்களும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vsk-protest-demanding-cancellation-of-neet-exam-in-chennai-thirumavalavan-calls-for-volunteers




