தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். இதில் இளம் நடிகர் திருவீர் நாயகனாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.இதில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் அவர் தாமினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு சி.ஹெச்.குஷேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவிருக்கிறது நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. சென்சார் சர்டிபிகேட் இந்த நிலையில், தணிக்கை வாரியம் ‘ஓ சுகுமாரி’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டோர் இந்த படத்தினை தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம். ‘ஓ சுகுமாரி’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/censor-board-grants-ua-certificate-to-aishwarya-rajeshs-oh-sukumari-film




