சென்னை, சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலமன் பாப்பையா காலமானார் பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுமா? என அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அரசு மரியாதை வழங்குவது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/funeral-rites-with-state-honors-for-solomon-pappaiahs-mortal-remains



