சேலம், சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்தார். அவர்களது கார் நெய்க்காரப்பட்டி பகுதி அருகே வந்தபோது திடீரென இன்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலசுப்பிரமணியம் உடனடியாக காரை நிறுத்தி, தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேற்றினார். இதனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/car-catches-fire-on-salem-coimbatore-national-highway-family-escapes-unharmed




