தேவையான பொருட்கள்: பூண்டு - 20 பல், சின்ன வெங்காயம் - 15, புளி -சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், கடுகு - ½ டீஸ்பூன், வெந்தயம் - ¼ டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், வெல்லம் - 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு), உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதலில் புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியான புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் தோல் நீக்கிய பூண்டை சேர்த்து, பூண்டு லேசாக பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். அதன்பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி வதக்கவும். இப்போது புளிக்கரைசல், தேவையான உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக சுண்டி, மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான, காரசாரமான பூண்டு குழம்பு தயார். இதை சூடான சாதம், இட்லி, தோசை அல்லது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். மொறுமொறுப்பான சிக்கன் கட்லெட். ஒருமுறை செய்து பாருங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-to-make-fragrant-garlic-kuzhambu




