சென்னை, கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் இயக்குநராகவும் கவனம் ஈர்த்து வருகிறார். அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை, அசுரன், விடுதலை 2, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். வரவேற்பைப் பெற்ற ‘யூத்’ கென் கருணாஸ் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகி பாராட்டுகளை குவித்தது. இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘முட்ட கலக்கி’ பாடலுக்கு மாபெரும் வரவேற்பு இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘முட்ட கலக்கி’ பாடல் இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் யூடியூபில் 25 கோடி பார்வைகளை (250 மில்லியன்) கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இதனை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். பாடலை எழுதி பாடிய கென் கருணாஸ் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த பாடலின் சிறப்பம்சமாக, பாடல் வரிகளை கென் கருணாஸே எழுதி, அவரே பாடியுள்ளார். இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. ‘முட்ட கலக்கி’ பாடலின் இந்த புதிய சாதனை, யூத் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. It’s a 250 Million for the highest viewed song for any feature film in 2026 India — G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/youth-film-mutta-kalakki-song-crossed-250-million-views




