புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் இன்று 34-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்தநிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களுக்கு ஆதரவாகவும் இன்று மாலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பிக்களுடன் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் காந்தி நினைவகத்திற்கு ராகுல் திடீர் விசிட் மேற்கொண்டார். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களுக்கு காந்தி நினைவிடத்தில் தேசிய கீதம் பாடி அஞ்சலி செலுத்தினார். பேருந்தில் ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புறப்பட்டபோது முதலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் போலீசாரால் அனுமதிக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/lok-sabha-lop-and-congress-mp-rahul-gandhi-along-with-india-bloc-mps




