சென்னை, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரெயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது. முதல் நிராகரிப்பு இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. 2-வது முறை. இதனை தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை எனவும் மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனவும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நிராகரிக்கப்பட்டு மே மாதத்தில் மீண்டும் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-coimbatore-metro-rail-project-rejected-again




