சென்னை, சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக புங்கா பூங்கா ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது 20 பேர் கொண்ட மாணவர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக கத்தியால் தாக்கினார்கள். தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயத்துடன் 2 மாணவர்களும் கீழே மயங்கி விழுந்தனர். தீவிர சிகிச்சை இதைப் பார்த்த பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்தகாயங்களுடன் கிடந்த 2 மாணவர்களையும் பெரியமேடு போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் மோதலில் காயம் அடைந்த ஒரு மாணவரின் பெயர் நிதீஷ்குமார் (19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் ஹேமந்த் குமார் (17) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவர்கள் மோதலுக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/murderous-attack-on-college-students-near-central-railway-station-2-in-intensive-care




