Full Article
படித்துவிட்டு வேலையில்லாத ஏராளமான இளைஞர்களுக்கு உணவு டெலிவரி ஒரு பகுதி நேர வேலையைக் கொடுக்கிறது. சிலர் தங்களது இலட்சியத்தை அடைவதற்காக இது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு படிப்பதுண்டு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (23) என்ற பெண் தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் மும்பைக்கு வந்துவிட்டார். அவர் மும்பையில் நடிகர்களைப் பார்க்கவோ அல்லது நடிகையாக வேண்டுமென்றோ மும்பைக்கு வரவில்லை. அவர் தனது லட்சத்தை அடைவதற்காக வந்துள்ளார். குஷ்பு வீட்டில் அவருடன் கூடப் பிறந்தவர்கள் 5 பேர் ஆவர். எனவே குஷ்பு பெற்றோரால் 5 பேரைச் சமாளிக்க முடியாமல் இருந்தது. ஆனால் குஷ்புவிற்கு எப்படியும் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதையடுத்து தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் பகல் நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்கிறார். உணவு டெலிவரி செய்யும் வேலை இரவில் தனது லட்சியமான போலீஸ் வேலைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். அவரது கனவு குறித்து ஸ்வக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கபூர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியக் கிராமங்களில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் வெளியேறிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குஷ்புவும் தனது கிராமத்தை விட்டு வெளியேறி 23 வயதில் காஜிபூரில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார். அவர் பகலில் உணவு விநியோகம் செய்து கொண்டு, இரவில் உ.பி., போலீஸ் தேர்வுக்குப் படிக்கிறார். பெரும்பாலான மக்கள் அவர்கள் திரும்பி வரக் கூடாது என்ற நம்பிக்கையில் மும்பைக்கு வந்தாலும், குஷ்பு தனது கிராமத்தில் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு நாள் போலீஸ் சீருடை அணிந்து திரும்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் வந்துள்ளார். வெளியேறும் தைரியம் பொதுவானது, ஆனால் ஏன் என்பதை அறியும் தெளிவு அரிதானது'' என்றும் அவர் கூறினார். இருவரும் தேனீர் கடை ஒன்றில் சந்தித்துக்கொண்ட போது குஷ்பு தனது கதையை கபூரிடம் தெரிவித்துள்ளார். குஷ்புவின் பேட்டி ஒன்றையும் ரோஹித் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குஷ்பு, தனக்கு நான்கு உடன்பிறந்தவர்கள் என்றும், பெற்றோரிடம் தெரிவிக்காமல் மும்பைக்கு வந்துவிட்டதாகவும், படித்துக்கொண்டே இங்கு உணவு விநியோகம் வேலை செய்து என்னைக் காப்பாற்றிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்புவிற்கு ரோஹித் கபூர் லேப்டாப் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து படிப்புக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் குஷ்புவை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



