மங்களூரு, கல்லூரி மாணவர்களை ராகிங் செய்து கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சீனியர் மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கலை கல்லூரி கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமீர் அலி (வயது 19) மற்றும் முகமது அல்பாஸ்(19). இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பாண்டேஸ்வர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த 19-ந் தேதி இவர்கள் கல்லூரி முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தனர். ராகிங் அப்போது அங்கு வந்த இவர்களது சீனியர் மாணவர்கள் 9 பேர், இவர்கள் இருவரையும் பலவந்தமாக மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர்கள் இருவரையும் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ய முயன்றனர். அதற்கு மாணவர்கள் அமீர் அலி, முகமது அல்பாஸ் ஆகிய இருவரும் ஒத்துழைக்க மறுக்கவே சரமாரியாக தாக்கினர். கொலை செய்வதாக மிரட்டல் ஆடைகளை கிழித்து எறிந்து பெல்ட், இரும்பு கம்பி மற்றும் இரும்பு குழாய்களை கொண்டு சரமாரியாக தாக்கி வெறிச்செயலில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி கல்லூரி நிர்வாகம், போலீசாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதையடுத்து படுகாயங்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்ற மாணவர்கள் அமீர் அலி மற்றும் முகமது அல்பாஸ் ஆகிய இருவரும் தங்களுடைய பெற்றோரின் உதவியுடன் நேற்று மங்களூரு பாண்டேஸ்வர் போலீசில் புகார் செய்தனர். 5 பேர் கைது அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவர்களை தாக்கிய சீனியர் மாணவர்களான கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரு பகுதியைச் சேர்ந்த ரேஹான், ரோகன் ரமேஷ், பீடிகாயில் பகுதியைச் சேர்ந்த நாசீத் அமீர், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது உவைஸ், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆதில் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 சீனியர் மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/five-college-students-taken-to-custody-over-alleged-ragging




