சென்னை, பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருந்து தெரிவித்தது, தி.மு.க. எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தி.மு.க, எம்.பி. கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். புகார் இது தொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் எச். ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்.எஸ்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். உத்தரவு இந்த வழக்கில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச். ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/six-month-prison-sentence-imposed-on-h-raja-set-aside-madras-high-court-order




