நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே எப்போதாவது வருவதுண்டு. நாம் ஒரு சாதாரண மனிதர்தானே, நம்மால் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைத்து பல நல்ல விஷயங்களைச் செய்யத் தயங்குவோம். இந்தத் தயக்கத்தை உடைத்தெறியும் ஒரு அற்புதமான பொன்மொழிதான் அமெரிக்க தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் (William James) கூறியது: "Act as if what you do makes a difference. It does." (நீங்கள் செய்யும் செயல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது போலவே செயல்படுங்கள். அது நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.) Quote of the day: வில்லியம் ஜேம்ஸ் இந்த வரிகளுக்கான அர்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அழகான ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ஒரு நாள் அதிகாலையில், கடல் சீற்றத்திற்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் அலைகளால் இழுத்து வரப்பட்டு கடற்கரை மணலில் விடப்பட்டன. சூரியன் உச்சிக்கு வரத் தொடங்கியதும், வெப்பம் தாளாமல் அந்த மீன்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒரு பெரியவர், தூரத்தில் ஒரு சிறுவன் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அருகில் சென்று கவனித்தபோது, அந்தச் சிறுவன் குனிந்து உயிருக்குப் போராடும் நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து மீண்டும் கடலுக்குள் வீசிக் கொண்டிருந்தான். Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! பெரியவர் அவனைப் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டார், "தம்பி, இந்தப் பரந்த கடற்கரை முழுவதும் ஆயிரக்கணக்கான மீன்கள் கிடக்கின்றன. நீ ஒருவனாகச் சில மீன்களை மட்டும் கடலில் தூக்கிப் போடுவதால் என்ன பெரிய மாற்றம் நடந்துவிடப் போகிறது? இது வீண் வேலை இல்லையா?" அந்தச் சிறுவன் அமைதியாகக் கீழே குனிந்து, மற்றொரு நட்சத்திர மீனை எடுத்து கடலின் ஆழமான பகுதிக்கு வீசிவிட்டுச் சொன்னான், "ஐயா, இந்த உலகத்துக்கு இது பெரிய மாற்றமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இப்போது கடலுக்குள் சென்றதே அந்த மீனுக்கு இது எவ்வளவு பெரிய மாற்றம்!" அந்தச் சிறுவனின் செயல்போலத்தான் நமது ஒவ்வொரு சிறு செயலும். நாம் உதிர்க்கும் ஒரு புன்னகை, சோர்வாக இருக்கும் ஒருவரிடம் நாம் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தை, சாலையில் கிடக்கும் ஒரு தடையை அப்புறப்படுத்துவது, அல்லது நமது அன்றாட வேலையைச் சலிப்பில்லாமல் நேர்மையாகச் செய்வது இவை எல்லாமே ஏதோ ஒரு வகையில் பெரிய மாற்றத்திற்கான விதைகளே. Quote of the day: வில்லியம் ஜேம்ஸ் முழு உலகத்தையும் ஒரே நாளில் மாற்றுவது நம் கையில் இல்லை. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள சிறிய உலகத்தை நேர்மறையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது. நாம் செய்யும் எந்தவொரு நல்ல காரியமும், சிறு உதவியும் வீணாவதில்லை. ஒரு துளி நீர் எப்படிப் பெருங்கடலின் ஒரு அங்கமாக இருக்கிறதோ, அதேபோல நம் ஒவ்வொரு சிறு நற்செயலும் இந்தச் சமூகத்தில் ஒரு நேர்மறையான அதிர்வலையை உருவாக்கும். எனவே, 'என்னால் என்ன ஆகப்போகிறது?' என்ற கேள்வியை இன்றோடு தூக்கி எறிவோம். நாம் செய்வது நிச்சயமாக ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற முழு நம்பிக்கையோடு இன்றிலிருந்து செயல்படத் தொடங்குவோம். Quote of the day: 'நாம் நாமாக இருப்பதே மாபெரும் சாதனை!' - ரால்ப் வால்டோ எமர்சன் தத்துவம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/lifestyle/motivation/act-as-if-what-you-do-makes-a-difference-quote-tamil




