சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்தார். 2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:- கட்டாய டெட் தேர்வு தேர்ச்சி என்ற உத்தரவால் 3.28 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்; இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கூறினார். அரசின் தனித் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-eligibility-test-government-resolution-unanimously-passed-in-the-legislative-assembly




