உசிலம்பட்டி, உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. ஆய்வு தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை, உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வரும் 28-ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கும் நிலையில் அங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர், முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/usilampattis-maternal-uncle-gold-ring-scheme-officials-inspect-in-person




