லூதியானா, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் மோதி விபத்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முக்கிய சாலையான பகதூர்கே சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தன. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்ற 2 பைக், 2 ஆட்டோ,ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் என அடுத்தடுத்து மொத்தம் 6 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. 5 பேர் காயம் இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஒருவர் மீது கார் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். மேலும், கார் மோதியதில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்ததுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு லூதியானா சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த சலீம் தாப்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கர விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/a-car-lost-control-and-crashed-into-6-vehicles-in-succession-causing-a-terrible-accident-5-people-were-seriously-injured




