புதிய விஷயங்களை படத்தில் கொண்டு வர வேண்டும் என்பதால், புதிதாக பார்ப்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும் என்று ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' உள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு ருசோ சகோதரர்கள் மீண்டும் மார்வெல் படத்தை இயக்குகின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடங்கியது முன்பதிவு படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதனால் மார்வெல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்த படம் படைத்துள்ளது. வைரலான டிரெய்லர் சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதில் அவெஞ்சர்ஸ், நியூ அவெஞ்சர்ஸ், வகாண்டா வீரர்கள், பென்டாஸ்டிக் போர் மற்றும் பழைய எக்ஸ்-மேன் கதாபாத்திரங்கள் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே டாக்டர் டூமை எதிர்கொண்டு சண்டை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘புதிதாக தொடங்குகிறோம்’ இதற்கிடையில், ‘டூம்ஸ்டே’ திரைப்படத்தை மார்வெலின் (MCU- Marvel Cinematic Universe) கதைக்களத்தில் ஒரு “புதிதாக தொடங்கும் கட்டம்” என ருசோ சகோதரர்கள் வர்ணித்துள்ளனர். ஏற்கனவே உருவாக்கப்பட்ட கதைகளை மட்டுமே நம்பாமல், புதிய விஷயங்களை படத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே தங்களது நோக்கம். புதிதாக பார்ப்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-surprise-for-marvel-fans-doomsday-set-to-transform-the-mcu




