சேலம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வா கியும், தமிழக சமூக நீதித்துறை அமைச்சரு மான வன்னியரசு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பா.ஜனதாவை கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்களின் கேள்விக்கு, 'பாம்புகளை பார்த்தால் அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள்' என்றார். மேலும் அவர் கூறும் போது, எனது துறையில் சுதந்திரமாக செயல்படுகிறேன். மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதல்-அமைச்சர் எனக்கு முழு வழிகாட்டுதலை வழங்கி உள்ளார். த.வெ.க.வை வீழ்த்துவதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும் என்ற டி.டி.வி. தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் ஆகும். கோட்பாடு அடிப்ப டையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்ப்பதற்கு இணைந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakarans-remarks-set-a-bad-precedent-minister-vanni-arasu-criticizes-sharply




