மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலியும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியும் இணைந்து 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை அள்ளி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லரும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த பட விழாவில் நடிகை அஞ்சலி பேசுகையில், “சில படங்களில் நடித்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றும். அப்படிப்பட்ட படமாக வந்து சேர்ந்த படம் இது. படங்களில் என் சக நடிகர்களின் நடிப்பு என்னை விட மிஞ்சியிருந்தால் மிகவும் சந்தோஷம் கொள்வேன். எனக்கு 'டப்' கொடுத்து நடிக்கும்போது ரசிப்பேன். நிவின் பாலி அந்த மாதிரி நபர் தான். எனக்கு 'டப்' கொடுத்து நடித்து அசத்தினார். இது நல்ல ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கிறேன். அது அவசியமும் ஆகும். சூரி எனக்கு ஒரு நல்ல நண்பர். நல்ல மனதுக்காரர். தொடர் வெற்றிக்கு பொருத்தமானவர் தான்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/co-actors-performance-surpassing-me-makes-me-happy-anjali




