சென்னை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவருடன் தன்னை தொடர்புபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுவில் கோரியிருந்தார். ‘ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு இல்லை’ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜான் பிரிட்டோவுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அவருடன் தன்னை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தங்களது பதிலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-issues-notice-to-mk-stalin-regarding-the-1-crore-compensation-suit-filed-by-aadhav-arjuna




