சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிருப்தியில் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். உதயநிதி இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர், "கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து இப்போது துறைவாரியான மானியக்கோரிக்கை நடந்து வருகிறது. காலை 9:30 மணி தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் வரைக்கும் கூட்டம் நடக்கிறது. TN Assembly: `கர்நாடகாவில் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களுக்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?' - உதயநிதி கேள்வி | Live ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்கள் அவைக்கே வருவதில்லை. சில நாட்கள் கொஞ்ச நேரம் மட்டும் அவையில் இருந்துவிட்டு மதியமே கிளம்பிவிடுகிறார். கடந்த வாரத்தில் உதயநிதி இரண்டு நாட்கள் அவைக்கு வரவில்லை. அந்த இரண்டு நாட்களில்தான் எம்.எல்.ஏக்களுக்கு கார், 'என்னுடைய டேபிளில் மூன்று துறைகளின் பைல்கள் இருக்கிறது' என முக்கியமான விஷயங்களை முதல்வர் அவையில் பேசினார். உதயநிதி அதற்கு கவுன்டர் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து வந்துதான் இந்த விவகாரங்களில் முதல்வருக்கு உதயநிதி பதில் கூறினார். அதேமாதிரி, அவையில் நேற்று முதல்வரின் நகராட்சி நிர்வாகத்துறைக்கான மானியக் கோரிக்கை தாக்கலானது. அதை முதல்வர் விஜய்க்குப் பதிலாக அமைச்சர் ராஜ்மோகன்தான் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் பதிலுரையும் ஆற்றவில்லை. உதயநிதி அவையில் இருந்து 'முதல்வர் எங்கே?' 'முதல்வருக்கு அவரின் துறையின் மேல் அக்கறை இல்லையா?' எனப் பேசுபொருள் ஆக்கியிருக்க வேண்டும். "பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை."- உதயநிதி கண்டனம் உதயநிதி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நேற்று காலையில் 110 விதியின் கீழ் பரந்தூர் விமானத் திட்டம் ரத்து என முதல்வர் அறிவித்தார். திமுக பரந்தூர் திட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால், முதல்வர் விமான நிலையத் திட்டம் ரத்து என அறிவிக்கையில் அவையில் உதயநிதி இல்லை. திமுக வெளிநடப்பெல்லாம் செய்து தங்கம் தென்னரசு அதைப் பற்றி பேசி முடித்த பிறகுதான் உதயநிதி அவைக்கே வந்தார். மேலும், ஒரு கட்சியாகவும் திமுக எம்.எல்.ஏக்களை அவையில் உதயநிதி முறையாக வழிநடத்துவதாகத் தெரியவில்லை. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி திடீரென மறுமதிப்பீடு செய்யப்பட்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. மேயர் பிரியா என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே அந்த முடிவை எடுத்துவிட்டார்கள் எனப் பேசியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை எந்த திமுக எம்.எல்.ஏவும் அவையில் எழுப்பவில்லை. உதயநிதி அவையில் பேசிய முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் உதயநிதி கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவை நிகழ்வு முழுவதும் நேரலையில் வேறு செல்கிறது. எல்லா மக்களும் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது இன்னமும் திமுகவுக்குச் சேதாரத்தைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே அதிகாரமில்லாமல் தோல்வியின் விரக்தியில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் உதயநிதியின் ஆர்வமின்மையால் இன்னும் சோர்வடைந்து போயிருக்கின்றனர். உதயநிதி முழுமையாக அவையில் இருந்து ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு உடனே உடனே பதிலடி கொடுக்க வேண்டும் என்றே திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்பார்க்கின்றனர். உதயநிதி அதைச் செய்ய தயாராக இருப்பதாகத் தெரியவில்லை" என்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-shows-little-interest-in-assembly-debates-dmk-mlas-upset



