கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நெதர் லாந்து முன்னாள் வீரர் ரையான் டென் டஸ்சாட் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது ஒப் பந்த காலம் முடிவுக்கு வந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அவரும் அத்துடன் விலகி விடுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மீண்டும் ஐக்கியமாகியுள்ள அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். லீக் கிரிக்கெட்டில் உலக அளவில் உள்ள கொல்கத்தா அணிகளின் கிரிக்கெட் யுக்திகள், வீரர்களின் திறமையை கண்டறிதல், அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்தல், அணியின் திட்டமிடல், செயல்திறன் மதிப்பீடு மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அவர் தலைமை தாங்கு வார். 46 வயதான ரையான் டென்டஸ்சாட் ஏற்கனவே 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா அணியில் அங்கம் வகித்தார். 2024-ம் ஆண்டில் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/dussaut-takes-charge-of-the-kolkata-team




