உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்பார்க்க செல்ல முடிவு செய்தனர். அவர்கள் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்திற்கு இடையே இரு சக்கர வாகனம் யமுனை ஆற்றுப்பாலத்திற்கு வந்தது. உடனே ஆற்றுப்பாலத்தில் ரிங்கு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். தனது மனைவியிடம் மகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கப்போவதாக கூறி மகளை அழைத்துக்கொண்டு ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக கட்டப்பட்டு இருந்த பகுதி வழியாக ரிங்கு நடந்து சென்றார். அங்கிருந்து தனது மகளுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். ஆனால் அதன் பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. திடீரென ரிங்கு தனது கையில் இருந்த மகளை ஆற்றில் வீசி விட்டார். இதனை சற்று தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி ஓடி வந்து தனது கணவனுடன் சண்டையிட்டார். ஆனால் லட்சுமியையும் ரிங்கு ஆற்றில் தள்ளிவிட முயன்றார். ஆனால் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி அப்பகுதி வழியாக வந்தவர்களிடம் லட்சுமி கேட்டுக்கொண்டார். அந்த வழியாக வந்தவர்கள் ரிங்குவை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் தீயணைப்பு துறையின் உதவியோடு ஆற்றில் குழந்தையை தேட ஆரம்பித்தனர். நீண்ட நேரம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து ரிங்கு மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/tragedy-following-an-argument-with-his-wife-father-throws-one-year-old-daughter-into-the-river-after-claiming-he-wanted-to-take-a-selfie




