இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும் அந்தவகையில் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்த விருதுப் பட்டியலில் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். திரைப்பட விருதுகள் சிறந்த திரைப்படம்: ஆர்டிகிள் 370 சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்) சிறந்த நடிகர்: இவ்விருது இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. 1. மம்மூட்டி (பிரம்மயுகம்) 2. கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) சிறந்த நடிகை: யாமி கெளதம் (ஆர்டிகிள் 370) சிறந்த துணை நடிகர்: சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக்) சிறந்த துணை நடிகை: இவ்விருது இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. 1. ரூபஸ்ரீ வர்காடி (மித்யா) 2. சச்சனா நாமிதாஸ் (மகாராஜா) சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: கல்கி சமூக மற்றும் தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த படம்: கேப்டன் மில்லர் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் சிறந்த இசை (பாடல்கள்): சாஷ்வத் சச்தேவ் (ஆர்டிகிள் 370) சிறந்த இசை (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் (அமரன்) சிறந்த பின்னணிப் பாடகர்: அபய் ஜோத்புர்கர் (கராத் கணபதி) சிறந்த பின்னணிப் பாடகி: வைகோம் விஜயலட்சுமி (ஏ.ஆர்.எம்) சிறந்த ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம்) சிறந்த திரைக்கதை: சுகுமார் (புஷ்பா 2) சிறந்த படத்தொகுப்பு: ஆர். கலைவாணன் (அமரன்) சிறந்த நடன அமைப்பு: விஜய் கங்குலி (ஸ்திரீ 2) சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா) சிறந்த வட்டார மொழித் திரைப்படங்கள் சிறந்த தமிழ்த் திரைப்படம்: ராயன் சிறந்த தெலுங்குத் திரைப்படம்: கமிட்டி குர்ரோலு சிறந்த வட்டார மொழித் திரைப்படங்கள் சிறந்த தமிழ் திரைப்படம்: ராயன் சிறந்த தெலுங்கு திரைப்படம்: கமிட்டி குர்ரோலு சிறந்த மலையாள திரைப்படம்: பெமினிச்சி பாத்திமா சிறந்த இந்தி திரைப்படம்: ஸ்ரீகாந்த் சிறந்த கன்னட திரைப்படம்: மித்யா சிறந்த மராத்தி திரைப்படம்: முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி சிறந்த பெங்காலி திரைப்படம்: சலச்சித்ர எகோன் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருதுகளை வழங்குவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/72nd-national-film-awards-announcement-full-details-of-award-winning-films




