காத்மண்டு, சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இமயமலையில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு திபெத் - நேபாள எல்லையில் உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 669 பேர் பலி வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி நேபாளத்தில் 669 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர். டு பிளசிஸ் வேதனை இந்நிலையில், நேபாள வெள்ள பாதிப்பை கண்டு மனம் உடைந்தேன் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நேபாளத்திற்கு சென்று அதன் மக்களின் அன்பையும், நாட்டின் அற்புதமான அழகையும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கடந்த ஆண்டு எனக்கு கிடைத்தது. ஆனால், தற்போது அங்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காணும்போது என் மனம் உடைகிறது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேதனைகளையும், இழப்புகளையும் சந்தித்துள்ள மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நேபாளம் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பிரட்நகர் கிங்ஸ் அணிக்காக டு பிளசிஸ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/heartbroken-by-nepal-floods-says-cricketer-du-plessis




