திருவனந்தபுரம், சபரிமலை கோவிலில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. கணக்கெடுப்பு பணி இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று மாயமாகி உள்ளது. தமிழக பக்கதர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கிரீடத்தை எடுத்து விட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 சவரன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலமாகி உள்ளது. போலி கிரிடம் இந்தக் கிரீடம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள கிரீடம், அசலின் அதே வடிவத்திலும் அளவிலும் உள்ள ஒரு போலிக் கிரீடம் என தெரியவந்துள்ளது. அதில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நன்கொடையாக வழங்கப்பட்டபோது அந்தக் கிரீடத்தின் எடையை விட, தற்போது பாதுகாப்பு அறையில் உள்ள போலிக் கிரீடத்தின் எடை குறைவாக இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அசல் கிரீடம் எங்கே என்பது விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி கிரீடத்தை வைத்துவிட்டு அசல் தங்க கிரீடத்தை திருடியதாகத் தகவல் எழுந்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே துவார பாலகர் சிலைகளில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது 5.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/the-golden-crown-donated-by-tamil-nadu-devotees-to-the-parimalai-ayyappa-temple-has-disappeared




