திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். பிரேமா இஷ்க் காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பவன் சதினேனி, துல்கர் சல்மான் நடிப்பில் ஆகாசத்தில் ஒக தாரா என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் பவன் சதினேனி கைது செய்யப்பட்டிருக்கிறார். பவன் சதினேனி காவல்துறையில் பெண் அளித்த புகாரில், குடும்பத்தினரால் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவன் சதினேனியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்பெண்ணின் தொழில் மற்றும் எதிர்காலத்தைக் கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பவன் சதினேனி அப்பெண்ணைக் கண்டுகொள்ளாமல், பாலியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், நடிகையாக வாய்ப்பு தருவதாகக் கூறி எவ்வித வாய்ப்பும் தரவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பல பெண்களுடன் பவனுக்கு இதேபோல் தொடர்பு இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை பவன் சதினேனியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர். Nepal: "என் குடும்பமே கண்முன்னே காணாம போயிருச்சு." - இடுப்பளவு சேற்றில் உடல்களைத் தேடும் உறவுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/tollywood/director-pavan-sadineni-has-been-arrested-in-a-sexual-assault-case



