சேலம், சேலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தினாள். மேலும் அவளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்கள் சிலர் பழக்கம் ஆனார்கள். இதனிடையே அந்த சிறுமி சமீபத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினாள். இதில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த நண்பர்களான சிறுவர்கள் உள்பட 7 பேர் கூட்டாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 21), ஆகாஸ் (19) மற்றும் 13, 17 வயதுடைய சிறுவர்கள் உள்பட 7 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், ஆகாஷ் மற்றும் சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமிக்கு கூட்டாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/gang-sexual-abuse-of-14-year-old-girl-4-arrested




