சென்னை, தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்றும், வெயில் கொளுத்துகிறது. சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 100 டிகிரியை தாண்டியும் வெப்பம் பதிவாகிறது. அந்தவகையில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி சுட்டெரித்தது. உலக வானிலை அமைப்பு தெரிவித்தபடி, கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டு நகரங்களாக சுட்டிக்காட்டப்பட்ட மதுரை, சென்னை 2 நகரங்களிலும்தான் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:- மதுரை விமானநிலையம் - 104 டிகிரி (40 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம் - 103.82 டிகிரி (39.9 செல்சியஸ்) திருத்தணி - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்) கடலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்) மதுரை நகரம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்) சுட்டெரித்த வெயில் வேலூர் - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்) திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்) சென்னை நுங்கம்பாக்கம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) நாகப்பட்டினம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்) பரங்கிப்பேட்டை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்) தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்) ஈரோடு - 100.4 டிகிரி (38 செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/weather/scorching-heat-in-tamil-nadu-temperatures-crossed-100-degrees-in-12-locations




