கோவை, கோவையில் அமைச்சர் ராஜேஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் ஒருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது அவர் நிலைப்பாடு. எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் எதிர்பார்க்கும் தலைவர் ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் வேட்பாளராக த.வெ.க. விஜய்யை முன்னிறுத்த போகின்றார்களா என்று கேட்கும் உங்களது யூகத்துக்கு பதில் கூற முடி யாது. கூட்டணியுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். 59 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியில் பங்கு வகிக்கிறோம். வாக்குச்சாவடி அளவில் கட் சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கைச்சின்னம் வெற்றி பெற நடவடிக்கை எடுப்போம். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை த.வெ.க. நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijay-the-prime-ministerial-candidate-minister-rajeshkumars-sensational-response




