புதுடெல்லி, இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது நாள் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மகளிர் இரட்டையர் பிரிவில் த்ரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்று 16வது சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க ஜோடியை வீழ்த்திய திரிஷா - காயத்ரி உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லாரன் லேம் - அலிசன் லீ இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திரிஷா - காயத்ரி இணை 16வது சுற்றுக்கு முன்னேறியது. உன்னதி ஹுடாவுக்கும் வெற்றி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை உன்னதி ஹுடா, மியான்மரின் தெட் ஹதார் துசார்-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் உன்னதி 22-20, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையரில் பின்னடைவு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆசித் சூர்யா - அம்ருதா பிரமுதேஷ் ஜோடி கடுமையான போராட்டத்துக்கு பிறகு தோல்வியடைந்தது. மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் ருத்விகா காடே - ரோஹன் கபூர் ஜோடி, கனடாவின் கிறிஸ்டல் லாய் - ஜொனாதன் லாய் இணையை எதிர்கொண்டது. மூன்று செட்கள் வரை நீடித்த இந்த போட்டியில் இந்திய ஜோடி 22-20, 19-21, 17-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/bwf-world-championships-2026-treesa-gayatri-advance-kavipriya-simran-bow-out-in-womens-doubles




