ஐதராபாத், தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் காயம் இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நேற்று மேற்கூரை இடிந்து விழுந்தது. பலகையால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 நோயாளிகள், 2 செவிலியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/telungana-government-hospital-roof-collapse-6-injured




