நியூயார்க் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய 3 நகரங்களை ஒருங்கிணைத்த நியூயார்க் மாகாணம் முழுவதும் இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்திற்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது, நியூஜெர்சி நகரில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. அணிவகுப்பு நிகழ்ச்சி இந்திய தொழில் நுட்ப நிறுவனம் ஜோஹோ ஆதரவுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் 250-ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வை குறிக்கும் வகையில், 1,300 அமெரிக்க தேசிய கொடிகளும், அவற்றை சுற்றி இந்திய மூவர்ண கொடிகளும் இருப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குயின்ஸ் என்ற இடத்தில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், நியூயார்க் நகருக்கான இந்திய வம்சாவளியை சேர்ந்த மேயர் ஜோரான் மம்தானி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய மற்றும் அமெரிக்க சமூக உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் சமூக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/america-guinness-world-record-at-indian-independence-day-celebration




