வெலிங்டன், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர், ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் அறிமுகமாகி பழகி வந்தனர். இது காதலாக மாறியது. சமீபத்தில் கல்லூரி மாணவி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், கல்லூரி மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர் மாணவியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-student-pregnant-college-student-arrested-under-pocso




