சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் பரவும் செய்தி சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில்," கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுவதாகவும், தற்பொழுது அப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/have-the-services-of-100-womens-special-buses-been-stopped-in-chennai-fact-checker-denies




