சென்னை, மக்களின் தாகம் தீர்க்க முதல்-அமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது கவலையளிக்கிறது. ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்ட நிலையில், அதனை எதிர்கொள்ள தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதே மக்கள் தாகத்தில் தவிக்க முக்கிய காரணமாகும். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வர் விஜய்யின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு மக்களின் தாகம் தீர்க்க ஆழ்துழைக் கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/parched-people-government-must-act-on-war-footing-nainar-nagendran




