காந்திநகர், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தின் 75-வது பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்பு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் மாணவர்களிடம் உரையாற்றியபோது அவர் கூறியதாவது;- “மாணவர்களாகிய நீங்கள் கல்வியை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படுத்திக்கொள்வதைத் தாண்டி, பரந்த அளவில் உங்களால் பொதுநலனுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். உங்கள் பணியின்போது தேசம் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாடு மற்றும் சமூகத்தின் வளர்ச்சியோடு நீங்களும் முன்னேறுவீர்கள். அத்தகைய முன்னேற்றம் உங்களுக்கு அளவற்ற மனநிறைவை அளிப்பதோடு, கல்வியின் அர்த்தத்தை உங்களால் உணர முடியும். நீங்கள் ஒரு பொறியாளராக மாறினால், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்குங்கள். நீங்கள் ஒரு மருத்துவராக மாறினால், மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டும் கருதாமல், ஒரு சேவையாக கருதுங்கள். சேவையில்தான் மனிதாபிமானமும் அமைதியும் அடங்கியுள்ளன. அது மனநிறைவையும் தருகிறது. வாழ்வதற்கு வளங்கள் தேவை என்றாலும், பணம் மட்டுமே எல்லாம் என்று ஆகிவிடாது. பிறருக்கு சேவை செய்வதில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கிறது. அறிவியலாளர்கள் மனிதகுல நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்ற வேண்டும். அதேவேளையில், கலைஞர்களும், எழுத்தாளர்களும் தங்கள் கலை மற்றும் படைப்புகள் மூலம் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான பண்பை வளப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/students-must-always-prioritize-the-welfare-of-society-president-droupadi-murmu




