குடும்பத்தை தவிக்கவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கணவருக்கு அரசு வேலை வழங்குவதாக என கரூரில் பலியான சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கூறினார். கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கினார். இதற்காக தேர்வு செய்யப் பட்ட பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்கத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். கணவர் மீது குற்றச்சாட்டு அப்போது ஒரு இளம்பெண் தனக்கு அனுமதி அளிக்காமல் தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்ற கணவரை அதிகாரிகள் அனுமதித்து உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கண்ணீர் மல்க கூறும்போது, எனது பெயர் திருவளர் செல்வி என் கணவர் ரகுநாதன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டார். எனது மகன் சனுஜ் வர்ஷனை சிறு வயது முதல் என் தாயின் உதவியுடன் வளர்த்து வந்தேன். கூட்ட நெரிசல் இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் எனது சகோதரியுடன் சென்ற எனது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதா பமாக உயிரிழந்தான். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் இருந்து எனக்கு முறையான நிவாரண உதவிகள் அனைத்தும் சட்டப் பூர்வமாக வழங்கப்பட்டது. ஆனால், எனது மகனின் இறுதி சடங்கு மற்றும் இதர நிகழ்வுகளின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உயிரிழந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை அறிந்து இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், எனது கணவர் கூட்ட அரங்கில் அமரவைக்கப்பட்டு இருந்தார். கண்டுகொள்ளாத தந்தை கடந்த 10 ஆண்டுகளாக பிள்ளையை கண்டு கொள்ளாத, ஒரு நாள்கூடப் பள்ளிக்கு அழைத்து செல்லாத அவருக்கு எந்த அடிப்படையில் அதிகாரிகள் அரசு வேலை வழங்கு கிறார்கள்? எனக்கு என்று ஆம்பளை துணை யாரும் இல்லை. நியாயம் கேட்க போனால் யாரும் முறையான பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-a-government-job-available-to-a-husband-who-married-another-woman-mother-of-a-boy-who-died-in-karur-cries




