மணி சேயோன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது நடிகர் சண்முக பாண்டியன் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து ‘மதுரை வீரன், படைத்தலைவன், கொம்புசீவி’ என்ற படங்களில் நடித்தார். திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ தற்போது திரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய படத்தின் படப்பிடிப்பு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கேப்டனின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சேயோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பூஜையுடன் தொடக்கம் இன்று காலை சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முறைப்படி கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். தொடர்ந்து, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் போர்டை அடித்து துவங்கி வைத்தார். டாக்டர்.ஜானு ஸ்ரீ சுதீஷ், நடிகர் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள ‘புரொடக்சன் நம்பர் 10’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றிலிருந்து அதிவேகமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மனு ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் மற்ற முக்கிய நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. மாலை 6 மணிக்கு ‘டைட்டில் லுக்’ இன்னும் பெயரிடப்படாத இந்த ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6:00 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக வெளியிட உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/shanmuga-pandians-new-film-shooting-begins-with-a-pooja



