மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் எதிரே பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திரையரங்கம் மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கில், கொரோனா காலத்தின்போது திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டு திரையரங்கம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. திரையரங்கம் மூடப்பட்ட பின்னர், அந்த வளாகம் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட டாய்ஸ் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாக திரையரங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கார் பார்க்கிங் ஆகவும் அந்த வளாகம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. விரைந்த தீயணைப்பு வீரர்கள் இந்த நிலையில் இன்று மாலை திடீரென திரையரங்க வளாகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அதிகளவில் புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் பகுதிக்கு வந்திருந்த நிலையில், கோவில் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-terrible-fire-broke-out-in-a-cinema-hall-opposite-the-west-tower-of-the-madurai-meenakshi-amman-temple




